'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 09, 2020 08:39 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க அதிபர் மாளிகையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Vedic chanting at the White House at the request of Trump

அமெரிக்காவை, கொரோனா வைரஸ் புரட்டிபோட்டு வரும் நிலையில், அங்கு தேசிய அமைதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவில் அமைதி நிலவ வேண்டியும், மக்கள் நோய்தொற்றிலிருந்து விடுபட்டு அமைதியா வாழ வேண்டியும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமான வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூ ஜெர்சியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலின் புரோகிதர் ஹரிஷ் பிரம்பாத் இந்த பூஜைக்கு வந்திருந்தார். அப்போது உலக மக்களின் நலனுக்காகவும், அமைதிக்காகவும், வேத மந்திரங்களை முழங்கி ஹரிஷ் பிரம்பாத் சிறப்பு பூஜை செய்தார்.