'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா!'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் 33 லட்சத்து 7 ஆயிரத்து 650 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் அமெரிக்காவின் நிலை படுமோசமாக உள்ளது.

இந்த கொடிய வைரஸ் நோய்த் தொற்றுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்னதான் சீனாவின் வுஹான் நகரில் இந்த கொடிய வைரஸ் தோன்றினாலும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் உண்டு இல்லை என்று பண்ணி கொண்டு வருகிறது.
அதன்படி தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் அமெரிக்காவின் மிக மோசமான நிலைக்கு உதாரணமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 201 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவாலான பலி எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
