‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்எச்1பி விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் தங்குவதற்கான காலம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் தங்கியுள்ளோர் 60 நாட்கள் ஊதியமின்றி இருந்தால், விசா ரத்தாகும் நிலை உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பலர் 40 நாட்களுக்கு மேலாக வேலைவாய்ப்பை இழந்துள்ளதால், சுமார் 2 லட்சம் பேரின் எச்1பி விசா ரத்தாகும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலும் இந்தியர்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் (H1B Visa) எச்1பி விசா வைத்திருப்போர் மற்றும் (Green Card) அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பித்து காத்திருப்போருக்கான கால அவகாசம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையம் (The US Citizenship and Immigration Services (USCIS) ) தெரிவித்துள்ளது. கால நீட்டிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கப்பட்டது முதல் 60 நாட்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து, 60 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் ஹெச்1பி விசா, கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
