அமெரிக்காவில் 'குழந்தைகளை மட்டும்' தாக்கும் 'புதிய தொற்று...' 'நியூயார்க் நகர மேயர் ட்விட்டரில் எச்சரிக்கை...' 'ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 07, 2020 12:42 PM

அமெரிக்காவில் கொரோனாவைத் தொடர்ந்து குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது அங்குள்ள மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A new epidemic that only affects children in America

2 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் பரவுகிறது. ஒருவகை அழற்சியால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சொறி, வீங்கிய நிணநீர் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தஅறிகுறிகள் தெரிந்தால் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் வந்து அனுமதிக்குமாறு நியூயார் நகர மேயர் Bill de Blasio தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நோய்த் தொற்று கவாசாகி என்ற நோய் அறிகுறியுடன் ஒத்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறி தெரிந்தவுடன் மருத்தவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் நியூயார்க் நகர சுதாரத்துறை ஆணையர் Oxiris Barbot தெரிவித்துள்ளார்.