"சீனாதான் வைரசை பரப்பியது..." 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை சீனா உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்கும் என்று தான் நம்பவில்லையென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாதான் கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பியது, இது சீன வைரஸ், சீனாவிடம் நஷ்ட ஈடு கோரப் போகிறோம் எனக் கூறி வந்த ட்ரம்ப் நேற்று கூறியிருக்கும் கருத்து அனைவரையும் வியப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், சீனா கொரோனா வைரஸை உள்நோக்கத்துடன் வெளியிட்டிருக்கும் என்று தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த ட்ரம்ப் திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டது பலரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கொரோனா தொற்று எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவும் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மைக் பாம்பியோ கூறி வந்த நிலையில் திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
