"இது தந்தையின் தாலாட்டு கண்ணே.." மகளுக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. பதிலுக்கு தகப்பன் செய்த செயலால் கலங்கும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 27, 2022 11:45 AM

தன்னுடைய பெண் குழந்தைக்காக தந்தை செய்துள்ள செயல் குறித்த  புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

dad shaves head to look a like his daughter head after her surgery

பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பை விட சிறந்த அன்பை நாம் எங்கும் பார்த்து விட முடியாது.

அதிலும் குறிப்பாக, தந்தை - மகள் பிணைப்பையும், அந்த அன்பின் அனுபவத்தையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரித்து விட முடியாது.

ஒரு வித சிலிர்ப்பு

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வலம் வரும் நாம், சிறு பெண் குழந்தை மற்றும் அதன் தந்தை  ஆகியோர், அன்பைப் பரிமாறிக் கொள்ளும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நாம் அதிகம் கடந்திருப்போம். அதனைப் பார்க்கும் போது, நமக்கே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்.

dad shaves head to look a like his daughter head after her surgery

தந்தை - மகள்

அப்படி தந்தை - மகளின் ஆழமான பாசத்தை விவரிக்கும் ஒரு புகைப்படம் தான் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், மகளும் தந்தையும், தலையை முட்டிய படி இருக்கின்றனர். மேலும், இருவரின் தலையிலும், முடி கொஞ்சம் ஷேவ் செய்யப்பட்டுள்ளது.

காதலனுடன் சென்று சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்.. அலறியடித்து ஓடிய காதலன்..!

dad shaves head to look a like his daughter head after her surgery

தந்தையின் அன்பு

இதில், சிறு குழந்தையாக இருக்கும் மகளுக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே போல தந்தையும் தனது தலையில் முடியை ஷேவ் செய்து, மகளுக்கு உள்ள தையலைப் போலவே முடியையும் திருத்தியுள்ளார். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் சரி வர தெரியவில்லை.

ஆஹா.. வீசுன வலையில தானா வந்து விழுந்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் மீனவருக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

dad shaves head to look a like his daughter head after her surgery

கண் கலங்கும் நெட்டிசன்கள்

ட்விட்டரில் சமீபத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம், தற்போது அதிக லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்று வருகிறது . புகைப்படத்தைக் கண்டதும் கண் கலங்கும் பலர், 'இந்த உலகத்தில் தந்தையின் அன்பு தான் மேலானது' என்றும், 'இவர் தான் உலகின் சிறந்த தந்தை' என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான பதிவு, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #DAD SHAVES HEAD #DAUGHTER #SURGERY #மூளையில் அறுவை சிகிச்சை #பெண் குழந்தை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dad shaves head to look a like his daughter head after her surgery | World News.