சாமி, எப்படியாச்சும் எங்க 'அப்பா'வோட 'டீம' ஜெயிக்க வச்சிடு...! 'மேட்ச் நடுவில தோனி மகள் செய்த காரியம்...' - டிரெண்ட் ஆகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (04-10-2021) நடந்த போட்டியின் போது, சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் மகள் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் தற்போது டிரென்ட் ஆகி வருகிறது.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் 50-வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் துவக்க வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில், 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய டார்கெட்டுடன் களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்து விட்டது. சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள், 4 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிஎஸ்கே வெற்றி பெறவில்லை என்றாலும், கேப்டன் தோனியின் மகள் ஷிவா தோனியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஐந்து வயது ஆகும் குட்டிக் குழந்தை ஷிவா, தன்னுடைய அன்பு அப்பாவின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விரல் நகங்களை கடித்து பதற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் கண்களை மூடி, கைகூப்பி பிரார்த்தனையும் செய்ய ஆரம்பித்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து தோனி பேசுகையில், ''நாங்கள் 150 ரன்கள் வரை எட்டுவோம் என நினைத்தோம். ஆனால், எடுக்க முடியவில்லை. சில விக்கெட்டுகளை இழந்தபின் 15-ஆவது ஓவரிலிருந்து அடித்து ஆட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் எங்களால் ரன் எடுக்க முடியவில்லை. கிரவுண்ட் சற்று கடினமானதாக இருப்பதாக எனக்கு தோன்றியது'' என்று கூறியுள்ளார்

மற்ற செய்திகள்
