காதலனுடன் சென்று சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்.. அலறியடித்து ஓடிய காதலன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேவகோட்டை அருகே சொத்தில் பங்கு கேட்ட மனைவியை மண்வெட்டியால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புக்குடி கிராமத்தை சேர்ந்த அன்னலெட்சுமிக்கும் (வயது 32), காயஓடை கிராமத்தை சேர்ந்த வீராச்சாமிக்கும் (வயது 43) திருமணமாகி தயாநிதி (வயது 12), வித்திஷ் (வயது 7) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னலெட்சுமிக்கும், காளையார்கோவில் அருகே உள்ள முடிகரையைச் சேர்ந்த சதீஷ் (வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது முறையற்ற உறவாக மாறியுள்ளது. இதனை அடுத்து இருவரும் இரு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தலைமறைவாகிவிட்டனர். தற்போது இவர்கள் முடிக்கரை கிராமத்தில் வசித்து வந்தனர். கணவர் வீராச்சாமி தனது இரண்டு மகன்களுடன் புக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணலட்சுமி தனது காதலன் சதீஷுடன் புக்குடி கிராமத்திற்கு சென்று, தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளார். இதனை அறிந்த கணவர் வீராசாமி உடனே அங்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வீராசாமி, அருகில் இருந்த மண்வெட்டியால் அண்ணலெட்சுமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இதனைப் பார்த்த காதலன் சதீஷ் அலறியடித்து ஓடியுள்ளார். இதனை அடுத்து வீராசாமி மண்வெட்டியுடன் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
