ஆஹா.. வீசுன வலையில தானா வந்து விழுந்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் மீனவருக்கு அடித்த மெகா ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி : மீனவர்கள் வீசிய வலையில், மிகப் பெரிய அதிர்ஷ்டம் ஒன்று அடித்ததால், அனைவரும் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மிகவும் கடினமான சூழ்நிலையில், இரவு பகல் பாராமல் நடுக்கடலில் சென்றும் மீன் பிடித்து வருகின்றனர்.
அப்படி அவர்கள் வீசும் வலையில், பல ராட்சத மீன்கள் சிக்குவது தொடர்பான செய்திகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ராட்சத சுறா
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான், குளச்சல் பகுதியில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் மெல்பின். இவர் தன்னுடைய பைபர் படகில், சக மீனவர்கள் சிலருடன் குளச்சல் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, நடுக்கடலில் மெல்பின் மற்றவர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென வந்த ராட்சத சுறா ஒன்று அவர்கள் சென்ற படகின் மீது மோதியுள்ளது.
கரைக்கு வந்த மீனவர்கள்
இதில், மீனவர்கள் சற்று நிலை தடுமாறவும் செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், மீனவரின் வலைக்குள் அந்த சுறா மீனும் சிக்கிக் கொண்டுள்ளது. வலையில் சிக்கியது ராட்சத சுறா என்பதால், பைபர் படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு வர முடியாது என்னும் நிலையில், வலையோடு இழுத்த படியே, படகை ஒட்டி மீனவர்கள் துறைமுகம் வந்து சேர்ந்துள்ளனர்.
2 டன் எடை
அதன் பின்னர், விசைப்படகில் உள்ள கிரேன் உதவியுடன் கரைக்கு வந்த சுறா மீன், சுமார் 10 அடி நீளமும், 2 டன் எடையும் கொண்ட அரிய வகை 'உடும்பு சுறா' என்பது தெரிய வந்துள்ளது. இந்த சுறா மீனை அப்பகுதியிலுள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர். அது மட்டுமில்லாமல், சிலர் இப்படி அரிய வகை சுறா ஒன்றைக் கண்டதால், அந்த தருணத்தை தவற விடக் கூடாது என்பதற்காக, அதனுடன் புகைப்படத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் மகிழ்ச்சி
வலையில் சிக்கிய இந்த ராட்சத சுறா, சுமார் 1 லட்சம் ரூபாய் வரை விலை போனதால், மெல்பின் உள்ளிட்ட மற்ற மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பைபர் படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் நிலையில், தற்போது 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராட்சத மீன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.