VIDEO: அப்பா, ஒருநாள் 'நீ கேட்டத' வாங்கி தருவேன்மா...! 'அன்னைக்கு இந்த ஊரே நம்மள பார்க்கும்...' - கொடுத்த 'வாக்கை' நிறைவேற்றிய தந்தை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடீக்கடை நடத்தி வருபவர் ஒருவர், தனது 5 வயது மகளின் கல்விக்காக செய்த காரியம் இஇணையதளங்களில் டிரெண்டிங் ஆக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் டீ வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், ரூ.12,500 கொடுத்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். இன்று நாடு முழுவதும் பல கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். ஆனால் இவர் வாங்கிய முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை வருடங்கள் காத்திருந்து ஸ்மார்ட்போன் வாங்கிய மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் அந்த போனில் இருந்து அழைத்து மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துக் கொண்டார். ஒரு சாமானியனாக இருந்துக் கொண்டு, தன்னுடைய உழைப்பினால் சிறுக சிறுக சேமித்து ஒரு தொழில்நுட்பத்தை சொந்தமாக ஆக்கும்போது வரும் பூரிப்பு அது.
அதை சிறப்பாக கொண்டாடாமல் விட்டால் எப்படி? ஸ்மார்ட்ஃபோன் வாங்கி, அதை, தனது மகளின் கையில் கொடுத்து, ஒரு குதிரை வண்டியில் மகளை அமரவைத்து அலங்காரம் செய்து, வீட்டின் முன்னால் நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க, தேநீர் வியாபாரி கொண்டு வந்த விடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து முராரி குஷ்வாஹா கூறும்போது, என்னுடைய மகள் அடிக்கடி ஸ்மார்ட்ஃபோன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரிடம் சொல்லும்போதெல்லாம் கண்டிப்பாக விரைவில் வாங்கித் தருகிறேன்.
நாம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை இந்த ஊரே பார்த்து வியக்கும் விதமாக கொண்டாடுவோம் என்று கூறுவேன். உண்மையிலேயே நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு, இவ்வாறு குதிரை வண்டி, பேண்டு வாத்தியம், ஆட்டம் பாட்டம் என கொண்டாடி நானும் என் மகளும் மகிழ்ந்துள்ளேன். இனிமேல் என் மகள் கல்வி கற்க சிரமம் குறைந்துள்ளது தான் கூடுதல் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
#WatchVideo: A tea seller in #MadhyaPradesh takes home a mobile phone worth Rs 12,500 with Band Baja Barat #News #ViralVideo #MadhyaPradeshNews #Viral #MobilePhone
Read More: https://t.co/z3KCIkJspa pic.twitter.com/y1NySu4laD
— Free Press Journal (@fpjindia) December 21, 2021