அப்பாவ ரொம்ப 'மிஸ்' பண்ணலாம்...! 'மகளை கொஞ்சும் தோனி...' - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதல தோனி மகள் ஸிவா (ziva), அப்பாவுடன் எடுக்கப்பட்ட அழகிய போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாடினாலும், விளையாடவிட்டாலும் எப்போதும் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கிலேயே இருப்பார்.
அவரின் போட்டோவோ அல்லது அவரை பற்றிய செய்திகள் எப்போது வந்தாலும் அவை பரபரப்பாக பேசப்படும் மற்றும் அவரின் ரசிகர்களால் ட்ரெண்டிங்கும் செய்யப்படும்.
அதோடு சென்னை ரசிகர்கள் சொல்லவே வேண்டாம் தல தோனி என்றாலே ஆரவரமாகிவிடுவார்கள். தற்போது விஷயம் என்னவென்றால், தோனி மகள் ஸிவாவின் (ziva) அதிகாரப்பூர்வ பக்கத்தில், தோனி தன் மகள் ஷிவாவைக் கொஞ்சும் அழகிய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
அந்த இரு புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டது இல்லையென்றாலும், ஐபிஎல் மேட்ச்காக ராஞ்சியில் இருந்து சென்ற தோனி கொரோனா பரவல் காரணமாக இன்னும் வீடு திரும்பவில்லை.
ராஞ்சியில் தோனியின் மனைவி ஷாக்சியும், ஸிவாவும் தான் வீட்டில் இருக்கின்றனர். ஒருவேளை தன் அப்பாவை மிஸ் செய்யும் விதமாக ஸிவா இப்படி போட்டுள்ளார் எனவும் ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்ட நேரத்தில், ஐ.பி.எல்லின் முதல்பாதி நிறைவடைந்துள்ள நிலையில், 2வது பகுதி ஐ.பி.எல் போட்டியிலாவது தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
