VIDEO: கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தாய்’ கண்ட காட்சி.. ‘கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கு’.. வசமாக சிக்கிய இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞரை தாய் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பீனா. இவர் ஹூஸ்டன் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு பீனா சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது, தனது 15 வயது மகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக மர்ம இளைஞர் ஒருவர் எட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததை பீனா பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனை கவனித்த பீனா உடனே பாய்ந்து அந்த இளைஞரை பிடித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் கைதான இளைஞரின் பெயர் ஜேன் ஹாக்கின்ஸ் (21) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தைரியமாக செயல்பட்ட தாய்க்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
