அப்ரிடிக்கு ‘மருமகன்’ ஆகப் போகும் இளம் வேகப்பந்து வீச்சாளர்.. வெளியான அசத்தல் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 24, 2021 12:50 PM

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shahid Afridi opens up on daughter\'s wedding with Pakistan pacer

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ஷாகித் அப்ரிடி (44), பாகிஸ்தான் அணிக்காக 1996-ம் ஆண்டு அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 23 வருடங்கள் விளையாடியுள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அதன் பின்னர் ஓய்வு பெற்றார்.

Shahid Afridi opens up on daughter's wedding with Pakistan pacer

ஷாகித் அப்ரிடிக்கு அக்ஷா அப்ரிடி, அன்ஷா அப்ரிடி, அஜ்வா அப்ரிடி, அஸ்மரா அப்ரிடி, அர்வா அப்ரிடி என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான அக்ஷா அப்ரிடியை, பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷாவிற்கு திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shahid Afridi opens up on daughter's wedding with Pakistan pacer

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அப்ரிடி, ‘ஷாஹீன் ஷாவின் குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினரை அணுகி இந்த திருமணம் குறித்து பேசினர். இரண்டு குடும்பத்திற்கும் சம்மதம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்ய வேண்டும் அல்லாஹ் விரும்பினால் அது நன்றாக நடக்கும். ஷாஹீன் ஷா தொடர்ந்து கிரிக்கெட்டிலும், வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shahid Afridi opens up on daughter's wedding with Pakistan pacer | Sports News.