"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்" மொமண்ட்!.. IPS அதிகாரியின் நெகழ்ச்சி செயல்! வீடியோ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவரும் விஜயகுமார் ஐபிஎஸ், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தங்களிலும் ஆக்டிவாக இயங்கிவருபவர். இந்நிலையில், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட, அது தற்போது வைரலாகி இருக்கிறது..

ஆனந்த யாழை மீட்டுகிறாள்..
விஜயகுமார் ஐபிஎஸ் பகிர்ந்திருந்த வீடியோவில் அவர்களது மகள், அவருக்கு லிப்ஸ்டிக் போடுவதில் ஆர்வமாக ஈடுபடுகிறார். விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களும் அதனை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் இந்த வீடியோ தான் இப்போது டாக் ஆஃ ப் த டவுன்.
அம்பானி வாங்கிய புது ஹோட்டல் - விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
மகிழ்ச்சியை கொண்டுவருபவர்கள்
தான் வெளியிட்ட வீடியோவில், "மகள்கள்/ குழந்தைகள் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள். என்னுடைய மகள் நிலாவுடன்" எனக்குறிப்பிட்டுள்ளார் விஜயகுமார் ஐபிஎஸ்.
சமூக வலைத்தள பிரபலம்
டிவிட்டரில் சமூக நீதி, பாலியல் சமத்துவம், கல்வியின் முக்கியத்துவம், தன்னம்பிக்கைக் கருத்துக்களை பதிவிட்டு இளைஞர்கள் பலரின் ஆதர்சமாகத் திகழும் விஜயகுமார் ஐபிஎஸ், தன்னுடைய செல்ல மகளுடன் விளையாடும் இந்த வீடியோ நிச்சயம் வேற லெவல் கியூட் தான்.
daughters/ children bring all the happiness to the world. my daughter Nila with me 😍😊.#family #Daughter #happiness #wife #love #makeup #son pic.twitter.com/kwENpCqgHm
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) January 9, 2022

மற்ற செய்திகள்
