அக்கா கல்யாணத்துக்கு ‘பத்திரிக்கை’ கொடுக்க சென்ற இடத்தில் தங்கைக்கு நேர்ந்த சோகம்.. துக்கத்திலும் அப்பா எடுத்த ‘நெகிழ்ச்சி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அக்கா கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க சொந்த ஊர் சென்ற தங்கைக்கு எதிர்பாராமல் நடந்த விபரீதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (52). தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள். இதில் இளைய மகள் சுதா (19) கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் நாராயணன் வந்துள்ளார்.
அப்போது இளைய மகள் சுதா குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுதா கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு தந்தை நாராயணனும் குடும்பத்தினரும் துடிதுடித்துப் போயினர். மகள் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாம் என நினைத்த நாராயணன், இதுகுறித்து செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனைக்கு சுதாவின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
