'டாடி உன்ன பார்க்க வந்துடுவாரு மா...' 'மகள் பிறக்க 2 வாரமே இருந்த நிலையில்...' ஆப்கானில் இருந்து பூகம்பமாக வந்த செய்தி...' - நெஞ்சை 'உருக' வைத்த அம்மா...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு அமெரிக்க ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பிய மக்களை அமெரிக்க துருப்புகள் வெளியேற்றியது.
உலக நாடுகள் தாலிபானுடன் நிகழ்த்திய பேச்சு வார்த்தையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மக்கள் வெளியேற அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம், கடைசி கட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கப்படைகளை குறி வைத்து, காபூல் விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
அந்நேரத்தில், காபூல் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்களில் 190 பேர் பலியாகினர். அதோடு, 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர்.
அந்த தாக்குதலில் பலியான வீரர்களுள் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்த 20 வயது மரைன் வீரர் ரைலி மெக்குலம். ஆப்கானில் மீட்பு பணி முடிந்ததும் தன் மனைவி ஜியென்னா மற்றும் தனக்கு பிறக்க போகும் குழந்தையை காண செல்லலாம் என்று ஆசையாக இருந்துள்ளார் ரைலி.
ஆனால் துரதிஷ்டவசமாக குண்டு வெடிப்பு தாக்குதலில் ரைலி உயிரிழந்தார். தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை ரைலி பார்க்க வருவார் என்று ஆசையாக இருந்த ஜியென்னா கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட துடிதுடித்து போனார்.
இந்நிலையில், தற்போது ஜியென்னாக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த அழகிய நிகழ்வை ஜியென்னா தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதோடு, பிறந்த குழந்தைக்கு தனது கணவரது பெயரான 'லேவி ரைலி ரோஸ் மெக்குலம்' என்று புதிய பெயரை சூட்டியுள்ளார்.
அதோடு, குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் 'அப்பாவின் பெயரை நீ சுமந்து செல்வாய் மகளே.. அவருக்கு இனி மரணம் இல்லை' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.