பெத்த தாயோட உசுரு... 'எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல'!.. திடீரென மகள் எடுத்த அதிரடி முடிவு!.. இதயத்தை ரணமாக்கும் பாசப் போராட்டம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரிதான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாயின் கல்லீரலுக்கு மாற்றாக தனது கல்லீரலை கொடுத்த மகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரூவைச் சேர்ந்தவர் 52 வயதான சுனிதா. இவரது கல்லீரல் மிகவும் அரிதான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து அவரது 21 வயது மகளான வைஷ்ணவி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வந்தார். இதனையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது குறித்து மருத்துவர் சஞ்சீவ் ரோஹ்தகி கூறும் போது, "அரிதான பாக்டீரியா தொற்றால் சுனிதாவின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயர் ரத்த அழுத்தத்தாலும் அவதிப்பட்டு வந்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினோம். அதனைச் செய்ய அவரது மகள் முன்வந்தார்.
வைஷ்ணவியின் கல்லீரல் அளவு பிரச்னையாக இருந்த நிலையில், தாய் மற்றும் மகளின் கல்லீரல் பகுதிகளை பரிசோதனை நிலையங்களில் சோதனை செய்தோம். அதன் பின்னர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் செய்யப்பட்டது.
அவரது கல்லீரலின் வலது பக்கத்தில் அதிகளவு துணை நரம்புகள் இருந்தன. ஆகையால் முக்கிய உறுப்பு செயல்பாடுகளை உறுதிப்படுத்த நாங்கள் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது" என்றார்.
இது குறித்து வைஷ்ணவி கூறும் போது, "எனது தாய் மணலில் நடந்து சென்ற போது, இந்தப் பாக்டீர்யா தொற்று ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.
தாய்க்காக மகள் தனது கல்லீரலை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
