VIDEO: 'அரைசதம் அடிச்ச உடனே...' 'கோலி பெவிலியனை பார்த்து செய்த சைகை...' எதுக்காக அப்படி பண்ணினாரு தெரியுமா...? - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (22-04-2021) நடந்த இன்றைய 16-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சாம்சன் (21 ரன்கள்), சிவம் துபே (46 ரன்கள்), பராக் (25 ரன்கள்), ராகுல் திவாதியா (40 ரன்கள்) என பெரிய ரன் சேர்ப்பு நிகழ்த்தவில்லை என்றாலும் ஓரளவிற்கு அடித்து ஆடினார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதை பெரிய இலக்கு என்று சொல்லிவிட முடியாத நிலையில் நம்பிக்கையோடு பெங்களுரு அணி களம் இறங்கியது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி (72 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (101 ரன்கள்) ஆகியோர் இருவர் மட்டுமே சேர்ந்த எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் பந்தை துவைத்து எடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் 16.3 ஓவரில் 181 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த வருடம் தோல்வியை சந்திக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி தனது ஐம்பதாவது அரைசதத்தை கடந்தார். அப்போது விராட் கோலி அதை பெவிலியனில் இருந்த தன்னுடைய அன்பு மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி கையசைத்து காட்டி பறக்கும் முத்தத்தை அனுப்பினார்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த அரைசதத்தை குழந்தைக்கு சமர்பணம் என்பது போலவும் கையால் சைகை செய்தார். இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் தங்களின் குடும்பத்தாருடன் இருக்க அனுமதி அளித்துள்ளதால், அனுஷ்கா சர்மா மற்றும் அவருடைய மகள் வாமிகா ஆகியோர் விராட் கோலியுடன் சேர்ந்து அவர் விளையாடுவதை காண செல்கின்றனர்.