சொந்த மகளே இப்டி செஞ்சுட்டா.. நடுரோட்டில் கொலை செய்யப்பட்ட தாய்.. அதிர வைத்த காரணம்
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் : 40 வயது கோடீஸ்வர பெண்மணி ஒருவர் சில தினங்களுக்கு முன் நடு ரோட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், செய்தது யார் என்பது பற்றி, அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஆனைக்கால் அருகேயுள்ள ஜிகினி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன், கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒன்றில் வாக்களித்து விட்டு, காரில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது, காரின் முன்பு மோதி, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் விபத்துக்குள் ஆக்கினார். தொடர்ந்து, காருக்குள் இருந்த அர்ச்சனாவை வெளியே இழுத்து, அந்த மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் விவகாரம்??.. இரண்டு குழந்தைகளின் தாய் கொலை.. விசாரணையில் மிரண்டு போன போலீஸ்
வெளியான வீடியோ காட்சிகள்
மக்கள் அதிகம் மிகுந்த சாலை பகுதியில், இந்த கொலை நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, இந்த கொலை தொடர்பாக சில வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தது.
அதிர வைத்த பின்னணி
இதனை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அர்ச்சனாவை கொலை செய்தது அவரது இரண்டாவது கணவர் நவீன் என்பது தெரிய வந்தது. அவருடன், அவருடைய கூட்டாளி சந்தோஷ் என்பவரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரையும் பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்ட போது, வேறொரு தகவலும் வெளிவந்துள்ளது. அர்ச்சனாவின் 50 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடைய மகள் யூவிகாவே இந்த கொலைக்கு திட்டம் போட்டுள்ளார்.
திடீரென ‘விலகிய’ விராட் கோலி.. கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்.. என்ன காரணம்..?
கணவரை பிரிந்த அர்ச்சனா
அர்ச்சனா ரெட்டி முதலில் அரவிந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் யூவிகா. இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அரவிந்த்தை பிரிந்த அர்ச்சனா, ஜிம் நடத்தி வந்த நவீன் என்பவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், நவீன் அர்ச்சனாவை விட சுமார் 10 வயது வரை குறைவானவர் என்றும் தெரிகிறது.
அடிக்கடி தகராறு
இந்நிலயில், கடந்த சில மாதங்களாக நவீன் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், மகள் யூவிகாவுக்கும், நவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தவறான உறவாகவும் மாறியுள்ளது. இதனை அறிந்து கொண்ட அர்ச்சனா, அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து, நவீனை எச்சரித்த அவர், வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வெளியேற்றியுள்ளார். பின்னர், யூவிகாவும் நவீனுடன் சேர்ந்து வாழ்த்து வந்ததாக தெரிகிறது.
மகள் போட்ட திட்டம்
இந்நிலையில் தான், அர்ச்சனா கொடுத்த பணம், நவீனிடம் காலி ஆகியுள்ளது. நவீன் - யூவிகா தொடர்ந்து வாழ பணம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். இதனால், சொத்தில் தனக்கான பங்கை தருமாறு, தாயிடம் யூவிகா கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், தாயைத் தீர்த்துக் கட்டி, அனைத்து சொத்தும் அடைய வேண்டி, யூவிகா நவீனுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.
நாடகமாடிய யூவிகா
திட்டத்தின் படி, கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு வாக்களித்து விட்டுச் காரில் சென்று கொண்டிருந்த அர்ச்சனாவை வழிமறித்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து நவீன் கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாத வகையில் மகள் யூவிகா நாடகமும் ஆடியுள்ளார். பின்னர், நவீன் போலீசாரிடம் சிக்கிய பிறகு தான் உண்மை வெளிவந்துள்ளது.
கைது செய்த போலீசார்
அர்ச்சனாவிடம் உள்ள சுமார் 50 கோடி வரையிலான பூர்விக சொத்தை அடைய, அவருடைய மகளே கொலைக்கான திட்டம் போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நவீன், யூவிகா உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
