VIDEO : சீரியஸா 'அரசியல்' பத்தி... வீடியோ 'கால்'ல பேசிட்டு இருந்தப்போ,,, நிர்வாணமா நடந்து சென்ற நெறியாளர் 'மனைவி'... வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன.
![brazil tv host wife walked naked across camera during interview brazil tv host wife walked naked across camera during interview](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/brazil-tv-host-wife-walked-naked-across-camera-during-interview.jpg)
இதனால் ஐ.டி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை (Work from home) மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக வீடுகளில் இருந்து பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், வீடியோ கால் மூலமாக தனது உயர் அதிகாரியுடன் பேசும் போது வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகள் மூலமாக அதிகம் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் பத்திரிகையாளர் ஃபேபியோ போர்சாட் என்பவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கம் மூலமாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் வீடியோ நேரலையில் இன்டர்வியூ செய்து வந்துள்ளார். அப்போது, இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த நிலையில், அந்த நெறியாளரின் மனைவி நிர்வாணமாக தலையில் டவ்வல் ஒன்றுடன், நெறியாளரின் பின்னால் கடந்து போயுள்ளார். கணவர் வீடியோ நேரலையில் இருப்பதை அறிந்து கொண்ட மனைவி குனிந்து கொண்டே, கேமராவில் தெரியாதவாறு நடந்து செல்ல முயற்சி செய்து கடந்து போயுள்ளார்.
ஆனால், நெறியாளர் மனைவியை கண்ட அந்த அரசியல்வாதி சிரித்துக் கொண்டே யாரோ உங்கள் பின்னால் நிர்வாணமாக நடந்து சென்றனர் என தெரிவித்துள்ளார். இதனால் ஒரு நொடி திகைத்து போன அந்த நெறியாளர், அனைவரும் உன்னை பார்த்து விட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். சீரியஸாக நடந்த அரசியல் தொடர்பான உரையாடலில் இப்படி நடந்த சம்பவம் நேரலையில் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)