மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய்' படகுகள்... கடற்கரையில் ஒதுங்கியதை பார்த்து 'ஷாக்'கான மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய் படகுகள்' என அழைக்கபடும் வடகொரியா படகுகள் ஜப்பானின் கடற்கரையில் ஒதுங்குகின்றன.
நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் ச்நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.
கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது சர்வதேச செய்தி ஊடகங்கள் சில தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வடகொரியர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
வடகொரிய கடலில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சீனா ஆயுத பலத்துடன் கூடிய தொழில்துறை கப்பல்களை முன்னர் அனுப்பியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் நம்பிக்கையற்ற வட கொரிய மீனவர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அதிக தொலைவு கடலுக்குச் செல்வதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர்.
மேலும் கடலின் சீற்றம் தாங்க முடியாமல் பல வடகொரிய மீனவர்கள் கரை திரும்பாமல் போனதாகவும் கூறப்படுகிறது.ஒரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்தை கண்டு கொள்ளாத கிம் அரசு, மறுபக்கம் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மீனவர்களை கடலுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியும் வருகிறது
இதே வேளை, கடந்த 7 ஆண்டுகளில், கடல் அலைகளில் சிக்கி, படகு கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 50 வடகொரிய மீனவர்களை மீட்ட ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் முன்வைத்த முக்கிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவே கூறப்படுகிறது.
சீனாவின் ஆதரவுடன் வடகொரிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்க களமிறங்கும் தொழில்முறை படகுகள் ஒருபோதும் கடலில் தங்கள் இருப்பிடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை என பிரித்தானிய பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சரவ்தேச மீன் பிடி கண்காணிப்பு அமைப்பு (சயின்ஸ் அட்வான்ஸஸ், குளோபல் ஃபிஷிங் வாட்ச்) இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீன வம்சாவளியைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட கப்பல்கள் 2017 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மீன் பிடித்தன, 2018 இல் 700 மீன் பிடித்து உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து 160,000 மெட்ரிக் டன்னை விட அதிகமாக மீன் பிடிபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது இவை 346 மில்லியன் டாலர் மதிப்புடையவையாகும்.
வட கொரியா கடற்பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கும் ஐ.நா. மன்றத்தின் பொருளாதாரத் தடைகளை சீனா மீறியிருக்கலாம் என்றே முக்கிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சீனக் கப்பல்கள் உள்ளூர் கடற்படைகளை இடம்பெயர்ந்து வருகின்றன, சுமார் 3,000 வட கொரிய படகுகள் 2018 ஆம் ஆண்டில் ரஷ்ய நீரில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க கட்டாயப்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது. சிலர் எரிபொருள் அல்லது இயந்திர சிக்கல்கள், கடுமையான நீரோட்டங்கள் மற்றும் வலுவாக நிலவும் காற்றுகளால் ஜப்பானின் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.