எத்தன வெரைட்டி இருந்தாலும்... என்னைக்கும் நாம தான் 'டாப்பு'... லாக்டவுனுக்கு மத்தியிலும் 5.5 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Jul 24, 2020 07:52 PM

வீட்டில் இருந்தே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் இன்றைய காலத்தில் அவ்வப்போது அதுகுறித்த தகவல்களை உணவு டெலிவரி நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் லாக்டவுனுக்கு மத்தியில் அதிகமாக ஆர்டர் செய்து மக்கள் வாங்கிய உணவுகள் குறித்து ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Biryani to Become Most Ordered Dish in India amid Lockdown

அதன்படி 5.5 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் பிரியாணி முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 3,35,185 லட்சம் ஆர்டர்களுடன் பட்டர் நாணும் 3,31,423 ஆர்டர்களுடன் 3-வது இடத்தை மசாலா தோசையும் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து 4-வது இடத்தை சாக்கோ லாவா கேக் 1,29,000 ஆர்டர்களுடன் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை 84,558 ஆர்டர்களுடன் குளோப் ஜாமூனும், 27,000 ஆர்டர்களுடன் பட்டர்ஸ்காட்ச் மவுஸ் கேக்கும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தொடர்ந்து 4-வது வருடமாக சிக்கன் பிரியாணி முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல காய்கறிகள், பழங்களில் 323 மில்லியன் கிலோவுடன் வெங்காயம் மற்றும் 56 மில்லியன் கிலோ ஆர்டர்களுடன் வாழைப்பழமும் முதல் இடங்களை பிடித்துள்ளன. இதேபோல 3,50,000 இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகள், 47,000 மாஸ்க்குகள் மற்றும் 73,000 சானிடைசர்கள் ஆகியவற்றையும் ஸ்விக்கி டெலிவரி செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biryani to Become Most Ordered Dish in India amid Lockdown | Business News.