'அமெரிக்காவுக்கு போதாத காலம்... ' 'கருப்பின' விவகாரத்தால் 'தீயாய்' பரவும் 'வன்முறை...' 'வெள்ளை மாளிகை மூடப்பட்டது...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் மற்றொரு பெண் உயிரிழந்ததையடுத்து வன்முறை சம்பவங்கள் பெருகி வருகின்றன.

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாயிட் என்பவரை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிறவெறி கொலைக்கு எதிராக கருப்பினத்தவர்கள் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. மின்னி போலீஸ் பகுதியில் காவல்நிலையம் தீக்கிடையாக்கப்பட்டது. வாகனங்களும் தீவைத்து கொழுத்தப்பட்டன.
போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பல மணி நேரம் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிபரின் கருத்தக்க ட்விட்டர் நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே லூயிஸ்வில்லே என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
தற்போது போராட்டங்கள், சிகாகோ, இல்லினாய்ஸ், கலிஃபோர்னியா, டென்னஸ்ஸி, உள்ளிட்ட மாகாணங்களிலும் தீவிரமடைந்து வருகிறது.

மற்ற செய்திகள்
