எப்படி நீங்க 'கட்டுப்பாடு' விதிக்கலாம்?.... மாஸ்க்கை 'பிகினியாக' பயன்படுத்தி... வைரல் 'சம்பவம்' செய்த பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 26, 2020 09:22 PM

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இந்த கொடிய தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Woman wears bikini made of masks to protest against lockdown

அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டும், உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செயல்திறன் கலைஞரான பெண் ஒருவர் முகக் கவசத்தினை பிகினியாக மாற்றி அணிந்து கொண்டு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

முகத்தை தவிர கண், கைகள், கால்கள் என மற்ற அனைத்து பகுதியிலும் முகக்கவசத்தினை அணிந்த புகைப்படத்தினை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'மாஸ்க் அணிந்தால் பயன் கிடைக்கும் என்ற நிலையில் எதற்கு இந்த ஊரடங்கு. உடனடியாக ஊரடங்கை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் இந்த பெண்ணின் பதிவிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 'மாஸ்க் அணிவது என்பது ஒரே அடியாக வைரஸை விட்டு விரட்டுவதற்கு அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் பரவாமல் தடுப்பதற்கே', 'நாடே இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இந்த கடினமான சூழ்நிலையில், ஊரடங்கை நிறுத்த சொல்லி மாஸ்க் அணிவதையும் புறக்கணிப்பது என்பது மிகவும் கேவலமான செயல்' , 'இந்த வைரஸ் மூலம் நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதால் உங்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?' என பலர் தங்களது எதிர்ப்புகளை இந்த பதிவின் கீழ் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman wears bikini made of masks to protest against lockdown | World News.