'இனி உங்க நட்பே வேணாம்...' 'துண்டிக்கப்பட்டது உறவு...' 'அமெரிக்க அதிபரின்' அதிரடி 'அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க சீனா தாமதப்படுத்திவிட்டதாகவும், அதுகுறித்து போதுமான எச்சரிக்கை செய்யவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்ற தனது கோரிக்கையை அந்த அமைப்பு நிறைவேற்ற மறுத்துவிட்டதாக கூறினார். உலக சுகாதார அமைப்பை சீனா முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், வெளிப்படையாக இயங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு செவி சாய்க்கவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இதனால், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறுவதாகவும் டிரம்ப் கூறினார்.

மற்ற செய்திகள்
