ஈரானில் சாலைகளில் விழுந்து மரணிக்கும் மனிதர்கள்.. கொரோனாவாலா? என்கிற அச்சத்தில் நாட்டு மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே போகும் நிலையில் சாலைகளில் அப்படி அப்படியே மக்கள் விழுந்து மரணிக்கக் கூடிய அவலம் நிகழத் தொடங்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Iran people dies in public places due to covid19pandemic Iran people dies in public places due to covid19pandemic](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/photo-iran-people-dies-in-public-places-due-to-covid19pandemic.jpg)
ஈரானில் கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்றினால், இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெஹரானின் சாலைகளில் கடுமையான மூச்சிறைப்பினால் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகியது. இதேபோல் வணிக வளாகம், நகரும் படிக்கட்டுகளில் என ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி அப்படியே விழுந்து, இறந்து கிடக்கின்ற வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் தொற்று என்பதை மக்களும் அரசும் அறிவதற்கு முன்பாகவே இதுபோன்ற இழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று அந்நாட்டின் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆயிரக்கணக்கான குழிகளை ஈரான் அரசு தோண்டி வைத்துள்ள வீடியோவும் இன்னொருபுறம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)