"இந்த மேட்டர்ல அவங்கள எதுக்கு இழுக்குறீங்க?".. 'அங்க சுத்தி இங்க சுத்தி' ட்விட்டர் CEO-விடமே 'வாங்கிக்' கட்டிக்கொண்ட 'டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் தவறான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டுள்ளதாக ட்விட்டர் தளம் புகார் தெரிவித்ததை அடுத்து டிரம்ப் இதனை எதிர்த்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முன்னதாக கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால் மின்னஞ்சல் முறையில் வாக்கு செலுத்துதலைக் கடைபிடிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வாக்குப்பதிவு நடைமுறையினால் மோசடிகள் நடக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட இந்த பதிவு தவறானது என்று ட்விட்டர் தெரிவித்தது. இதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர் டிரம்ப், சமூக ஊடகங்கள் 2016 -ஆம் ஆண்டு நட்ந்த அதிபர் தேர்தலில் இருந்தே, தமது குரல்களை முடக்க பார்ப்பதாகவும் ஈமெயிலில் தேர்தல் நடந்தால் அதிக மோசடி செய்பவரே வெற்றி பெறுவார், அதேபோல் சமூக ஊடகங்களும் தற்போது செயல்படுகின்றன என்றும் இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக, ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸி கூறும்போது, “ட்விட்டர் தளத்தில் நடக்கும் அனைத்திற்கும் பொறுப்பாளியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நான்தான். ஆகவே இந்த பிரச்சனைகளில் எங்கள் ஊழியர்களை இழுக்க வேண்டாம். அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதும் தேர்தல் குறித்த தவறான தகவல்கள் எங்கு வெளியானாலும் நாங்கள் அதை தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருப்போம். நாங்கள் தவறு செய்தால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள்” என்று பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
