'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' "உளவு பார்த்தது போதும் கிளம்புங்க..." 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கல்வி பயிலும் சீனாவை சேர்ந்த பட்டதாரி மாணவர்களின் விசவை ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பிரச்சினை முற்றியுள்ளது. இவ்விவகாரத்தில் சீனாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களை தணிக்கை செய்வதற்காக அமெரிக்க செனட்டில் சில நாட்களுக்கு முன்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களை தணிக்கை செய்வதற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், சீன நிறுவனங்களை குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் கல்வி பயிலும் சீன பட்டதாரி மாணவர்களின் விசாவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் சீன ராணுவத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டள்ளார்.
இதனால் சுமார் 3,000 முதல் 5,000 சீன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என தெரிகிறது. உளவு பார்த்தல், அறிவுசார் சொத்துரிமை திருட்டு போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
