"தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்ற கொடூரம்!".. நடைபயிற்சி சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் நடைபயிற்சி சென்ற போது அவருடைய தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தலைவன்வடலியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்கிற மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்த நிலையில் நேற்று மாலை நடை பயிற்சிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் வீடு திரும்பாததால், உப்பாற்று ஓடைப் பாலம் அருகே அவருடைய தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் தலைவன்வடலி மற்றும் கீழேகிரனூரில் இருபிரிவினரிடையே மோதல் இருந்ததனால் சத்தியமூர்த்திக்கு சிலருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிய வந்தது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் அவருடைய கிடைக்கப்பெறாத தலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவருடைய உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகள் இளைஞரின் தலையை வெட்டி, கையோடு எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
