இத மொதல்லேயே 'செக்' பண்ணிருக்கணும்... 'தப்பு' செஞ்சுட்டாங்க... 'பைலட்' பரிசோதனை முடிவால் காத்திருந்த 'அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசைக் கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் கட்டிற்குள் இருக்கும் பல பகுதிகளில் சில முக்கிய தளர்வுகளை அரசு அறிவித்தது.

அதே போல வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்காக விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவிலிலுள்ள இந்தியர்களை அழைத்து வர டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு ஏர் இந்தியா ஏர்பஸ் A - 320 விமானம் கிளம்பியது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி, விமானிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு தான், விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும்.
ஆனால் மாஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தின் பைலட் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உஸ்பெகிஸ்தான் அருகே பாதி வழி வரை சென்ற விமானம் இரவு 12:30 மணிக்கு டெல்லி திரும்பியுள்ளது. விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் அதிலிருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பரிசோதனையில் விமானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், டெல்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக பைலட்டின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்கு பதிலாக நெகட்டிவ் என தவறுதலாக படித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, ரஷ்யாவிலிலுள்ள இந்தியர்களை அழைத்து வர மற்றொரு ஏர் இந்தியா விமானம் மாஸ்கோ அனுப்பப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
