அய்யோ 'அம்மா' காப்பாத்துங்க.. கோழியிடம் சிக்கி 'கதறிய' சிறுவன்.. வைரல் 'வீடியோ' உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 22, 2019 10:43 PM
சிறுவர்களுக்கு இயல்பாகவே உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். ஆனால் உதவி செய்யப்போய் அது மறக்கவே முடியாத திகில் சம்பவமாக மாறினால்? என்ன நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறதா? அப்படி ஒரு துயர சம்பவம் தான் ஒரு சிறுவனுக்கு நிகழ்ந்துள்ளது.

உதவி பண்ண வந்தது ஒரு குத்தமாடா 😂😂😂 pic.twitter.com/1JVgvRQgB5
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 22, 2019
பள்ளம் ஒன்றில் கோழியும் புதிதாக பொறித்த குஞ்சுகளும் இருக்கின்றன. மேலே ஏறும் முயற்சியில் தாய்க்கோழி ஈடுபடுகிறது. குஞ்சுகளால் முடியவில்லை. இதனைப் பார்த்த சிறுவன் ஸ்பைடர்மேன் போல உள்ளே குதிக்கிறான். அவனைக்கண்ட தாய்க்கோழி விரட்டி,விரட்டி அவனை வெளுக்க அம்மா என்ன காப்பாத்து என்று கத்துகிறான்.
கடைசியில் அவன் அம்மா வந்து கைகொடுத்து அவனைத் தூக்கி விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Tags : #VIDEO
