'இதான் அந்த வெறித்தனம்!'.. 'வீரர்களின் வாட்டர் சப்ளையராக மாறிய பிரதமர்'.. 'கிரவுண்டுக்குள் உற்சாகமாக ஓடிய பரபரப்பு சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 25, 2019 01:13 PM

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அந்நாட்டின் ஆஸ்திரேலிய பிரதமர் XI அணியுடன் மோதுவதற்கான பயிற்சி ஆட்டம் நடந்தது.

Australian PM Scott Morrison turns water supplier to players

இவற்றுள் ஆஸ்திரேலிய பிரதமரால் தேர்வு செய்யப்படும் வீரர்களைக் கொண்ட அணியான ஆஸ்திரேலிய பிரதமர் XI அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வருடாவருடம் செல்வதுண்டு. அப்படியான சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில், முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அடுத்து இலங்கை அணி தன்னுடைய இன்னிங்ஸை தொடங்கியபோதுதான் அந்த உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் சம்பவம் நடந்தது.

நேற்றைய தினம் நடந்த போட்டியைக் கண்டுகளிக்கும் விதமாக, அங்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 2வது இன்னிங்ஸின் 16-வது ஓவர் போய்க்கொண்டிருக்கும்போது, தனது அணியின் ட்ரேடு தொப்பியை அணிந்துகொண்டு வாட்டர் பாட்டில்களுடன் உற்சாகமாக மைதானத்தை நோக்கி ஓடியுள்ளார்.

என்னவென்று பார்த்தால், வீரர்களுக்கு வாட்டர் சப்ளை செய்துகொண்டிருக்கிறார். உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அரசியல் ஆர்வலர்களையும் விழிப்பில் ஆழ்த்திய இவர்தான் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது உபசரித்தவர். அதுமட்டுமல்லாமல், ‘அடுத்த டி20 மேட்ச் எங்க ஊர்ல வெச்சுக்கலாமா? மோடி ஜி நீங்க என்ன சொல்றீங்க?’ என்று ட்வீட்டும் போட்டுள்ளார்.

Tags : #CRICKET #VIRAL #AUSVSL #SCOTTMORRISON