‘ஆபத்தை உணராமல் அணையில் பயணம்’.. ‘நொடியில் துளையை நோக்கி இழுக்கப்பட்ட படகு’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 22, 2019 08:31 PM

அணை ஒன்றில் மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Daring Fishermen in boat Sail Dangerously Close To PlugHole

இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியில் உள்ளது லேடிபோவர் என்ற அணை. தொடர் மழையால் இந்த அணை நிரம்பி வழியும்போது, அதிகப்படியான நீர் அங்குள்ள டெர்வென்ட் ஆறு வழியாக வெளியேற்றப்படும். அதற்கென அணையின் 2 இடங்களில் 66 அடி ஆழத்துக்கு துளையிடப்பட்டு அங்கிருந்து சுரங்கப்பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, இந்தத் துளை அருகே படகில் பயணம் செய்தால், துளை வழியாக உள் இழுக்கப்படும் அபாயமும் உள்ளது.

சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த Flo Neilson என்ற பெண் நடைபயிற்சி சென்றபோது, மீனவர்கள் இருவர் படகில் அந்த துளை அருகே செல்வதைப் பார்த்துள்ளார். அப்போது துளையை நோக்கி படகு இழுக்கப்படுவதை அறிந்த மீனவர்கள், உடனடியாக சமார்த்தியமாக படகை திருப்பி அதிலிருந்து தப்பித்துள்ளனர். இதை அந்தப் பெண் பதிவு செய்த வீடியோ காட்சி வைரலானதைத் தொடர்ந்து, அணைக்கு மீன் பிடிக்க வருபவர்கள் அபாயகரமான பயணத்தை தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : #ENGLAND #FISHERMEN #DAM #SAIL #PLUGHOLE #BOAT #VIDEO #VIRAL