'இப்படியாயா பண்ணுவீங்க?'...'இந்நேரம் நாகேஷ் யாருனு கூகுள்ல தேடிட்டு இருப்பாய்ங்க!'.. CSKவின் 'வேற லெவல்' ரிப்ளை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 23, 2019 01:46 PM

சென்னை சூப்பர் கிங்ஸ்  என்கிற ஐபிஎல் அணியின் பெயரிலேயே சென்னை இருப்பதால் எப்போதும் தமிழுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் நெருக்கமாகவே உணரப்படுகிறது. 

CSKs hilarious reply from Rajini movie to a fan, goes viral

ஆனாலும் சில தமிழ் ரசிகர்கள் வேறு ஐபிஎல் அணிகளுக்கு ரசிர்களாக இருப்பதுமுண்டு. அப்படி ஒரு ரசிகர்தான், தனக்கு மும்பை இந்தியன்ஸ் அணிதான் விருப்பமான அணி என்றும், ஆனால் தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு என்றும் ஆங்கிலத்தில் ட்வீட் செய்திருந்தார். 

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ அட்மின், தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனிடம் இண்டர்வியூவுக்கு போகும்போது ரஜினி பேசும் வசனத்தை மாற்றி,  ‘உங்கள் காதலை நசுக்காதீர்கள். ஆனால் எப்போதும் உங்களுக்கு விருப்பமானதை காதலியுங்கள்’.. (‘Never crush your love. But always love your crush."- Nagesh, the mahaan who lived in 1765’) என்று பதில் அளித்துள்ளது. 

ஆங்கிலத்தில் இந்த வாசகத்தில் சொல்நயம் இருப்பதாலேயே இந்த கமெண்ட் வைரலாகி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இதைச் சொல்லியது 1765ல் வாழ்ந்த நாகேஷ் என்கிற மகான் என்று முடித்துள்ளார் அட்மின்.  ‘இனி நாகேஷ் யாருன்னு கூகுளில் தேடப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்’ சொல்லியும், ‘யாரு சாமி நீ?’ என்று அட்மினைப் பார்த்தும் பலரும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  

 

Tags : #CSK #MSDHONI #FAN #TWEET #VIRAL