'எனக்கும் 'கொரோனா' வர சான்ஸ் இருக்கு..!, ஆனால்...' 'சிகிச்சை அளிக்க வேண்டியது எங்களோட கடமை...' சீனாவில் இருந்து வந்தவருக்கு சிகிச்சை அளிக்கும் கேரள மாணவி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 03, 2020 01:49 PM

சீனாவில் இருந்து வந்த மருத்துவ மாணவிக்கு ,அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வரும் மாணவி மிருதுளா ஸ்ரீ போர் வீரர் போல் சிகிச்சை அளித்து வரும் சம்பவம் கேரளாவையே ஒரு கலக்கு கலக்கிவருகிறார்.

A Kerala-based intern treats a student infected with the corona

26 வயதான மிருதுளா எஸ். ஸ்ரீ. என்பவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் செவிலியராக படித்து வருகிறார். தற்போது கேரளாவில் அதிக அளவில் கொரோனா பரவுவதால் அனைத்து விதமான மருத்துவ பணியாளர்களையும் முடக்கிவிட்டுள்ளது கேரள அரசு. இதில் மிருதுளா ஸ்ரீயும் ஒருவர்.

அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வரும் மாணவியான இவர், முறையாகச் செவிலியராக மாறுவதற்காகக் கல்லூரி சார்பில் கொடுக்கப்படும் பயிற்சிக்கானச் செவிலியராக கொரோனா தொற்று உள்ள வார்டில் தனது முதல் வேலையைத் தொடங்கியுள்ளார். தனக்கும் நோய்த் தொற்று ஏற்படலாம்  என்ற பதட்டம் இருந்தாலும் இவரைப் போல பல செவிலியர்கள் கொரோனாவிற்கு எதிராக நின்று போர் வீரர்களைப் போல் செயலாற்றி வருகின்றனர்.

மிருதுளா தற்போது சீனாவில் இருந்து வந்த ஒரு மருத்துவ மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மருத்துவ மாணவருக்கு ஒரு மருத்துவ செவிலியர் சிகிச்சை அளிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இன்று இந்தியாவின் தலைப்புச் செய்தியாகி உள்ளது. காரணம் இவரைப் பற்றி ‘மன் கீ பாத்’ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மருத்துவத்துறையில் இருக்கும் எங்களுக்கு எந்த வித தயக்கம் இன்றி ஆபத்து காலங்களில் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பது எங்களது கடமை மற்றும் வேலை.  சந்தேகம் மற்றும் கவலைகள் இடையே தான் செயல்படவேண்டும்' என மிருதுளா ஸ்ரீ கூறியுள்ளார்.

Tags : #NURSE