'இவங்கள நியாபகம் இருக்கா?.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 20, 2019 11:52 AM

5 மாதங்களுக்கு முன் போர்ட்லாந்தில் இருந்த தனியார் மகப்பேறு சிறப்பு மருத்துவமனை ஒன்றில் பிரச்சனையே இதுதான்.

9 nurses in a nursing home gave birth in a same time

அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த 9 நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமானதுதான். எல்லாருக்கும் ஒரே நேரத்தில் டெலிவரி ஆகுமே?, பணிகளை எப்படிச் செய்வார்கள் என்கிற பதட்டம்தான். ஆனால் அவையேதும், அவர்களை பாதிக்காமல் அந்த மருத்துவமனை அவர்களை பார்த்துக்கொண்டதுதான் இதில் பியூட்டி.

காரணம், அந்த செவிலியர்கள் மகப்பேறு காலத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் செய்த டியூட்டி. தங்களுக்குள்ளேயே மாற்றி கர்ப்ப கால செக்கப்கள் அனைத்தையுமே செய்துகொண்ட இந்த கர்ப்பிணிகள் அனைவருமே தற்போது 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தாயாகியுள்ளனர்.

இவர்களை ஃபோட்டோ ஷுட் எடுத்த கார்லி முர்ரே என்கிற பெண் புகைப்படக் கலைஞர், இந்த குழந்தைகள் வளரும்போது இவர்களின் அம்மாக்கள் செய்துவந்த புனிதமான பணிகளைப் பற்றி தெரிந்துகொள்வார்கள் என்கிற கேப்ஷனோடு, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து மீண்டும் இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags : #BABY #NURSE #MOTHER #HOSPITAL #VIRAL