'பிரசவத்திற்கு சென்ற 'கர்ப்பிணி'...'திடீரென ஏற்பட்ட ரத்தக்கசிவு'...கவனக்குறைவால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 21, 2019 11:59 AM

கர்ப்பிணியின் வயிற்றில் செவிலியர்கள் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nurse Leaves Syringe Inside Pregnant Woman\'s Body During Operation

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகேயுள்ள வலசையைச் சேர்ந்தவர் ரம்யா. 21 வயதான ரம்யா நிறைமாத கர்ப்பிணியாவார். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, கடந்த 17-ம் தேதி உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், அங்கிருந்த செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து அவருக்கு குழந்தை பிறக்க, தாயும் சேயும் நலமுடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ரம்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலி தீராத நிலையில், திடீரென இரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன அவரது உறவினர்கள்,  உடனடியாக ரம்யாவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அப்போது அவருடைய வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ஸ்கேனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ரம்யாவின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த ரம்யாவின் உறவினர்கள், உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு செவிலியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என கூறிய ரம்யாவின் உறவினர்கள், பிரசவம் பார்த்த செவிலியர்களை கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன், ''அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்''.

Tags : #PREGNANT WOMAN #NURSE #SYRINGE #OPERATION