‘கொரோனா வந்துடுச்சுனா!’.. ‘காலி செய்ய சொன்னதால் நடுரோட்டில் மருத்துவர்கள்!’.. ‘வீட்டு உரிமையாளர்கள்’ மீது அமித் ஷா ‘அதிரடி’ நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் முக்கிய நடவடிக்கையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்தியா முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பலரும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இதனிடையே எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில் வாடகை வீட்டில் குடியிருக்கும் மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் , செவிலியர்கள் பலரும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் மூலமாக கொரோனா பரவும் என்கிற அச்சத்தின் காரணமாக வீட்டு உரிமையாளர்கள், அவர்களிடம் வீட்டை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், ஏற்கனவே பலரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், பல மருத்துவர்கள் வீடுகள் என்று நடுரோட்டில் நிற்பதாகவும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்தநிலையில் மருத்துவத் துறை ஊழியர்களை வீடு காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா, டெல்லி மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இது பற்றி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.