'டீன் ஏஜ் பொண்ண கடத்தி'...காப்பாத்த போன இளைஞர்...'நிர்வாணமாக ஓடிய சிறுமி'...நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 14, 2019 01:02 PM

தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள் பதைபதைக்க செய்கிறது. இதனிடையே கொடூரத்தின் உச்சமாக, கோவிலுக்கு சென்ற சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Raped And Beaten Teen Ran Naked Till Her Rescue in Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த பதின் பருவ சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், அவர்களை வழிமறித்தனர்.இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து சிறுமியுடன் வந்தவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதனால் அவர்கள் பயத்தில் தப்பி ஓடினார்கள்.

இந்நிலையில் அந்த கும்பலிடம் அந்த சிறுமி தனியாக மாட்டி கொள்ள, அவளை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இதனிடையே என்ன செய்வது என தெரியாமல் தப்பி ஓடிய சிறுமியின் உறவினர்கள், அங்கிருந்த மார்கெட்டிற்கு சென்று பலரிடம் உதவி கேட்டுள்ளார்கள். ஆனால் யாரும் உதவ முன்வராத நிலையில், அங்கு சிறு கடை வைத்திருந்த இளைஞர் ஒருவர் உதவ முன்வந்தார்.

இதையடுத்து சிறுமியை கடத்தி சென்ற இடத்தை கண்டுபிடித்த அவரது உறவினர்கள் சிறுமியை மீட்க அங்கு சென்றார்கள். அப்போது சிறுமியின் உறவினர்கள் வருவதை பார்த்த மூன்று பேர் கொண்ட போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த காப்பாற்ற போன இளைஞரை பார்த்த அந்த சிறுமி, இவரும் தன்னை கற்பழிக்க தான் வருகிறார் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி  கி.மீ தூரம் ஓடியுள்ளார்.

ஆனால் சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய அந்த கடைக்காரர், ''நான் உன்னை காப்பாற்றத்தான் வந்தேன், பயப்படாதே'' என கூறிய பின்பு தான் அந்த பெண் நின்றுள்ளார். உடனே  தனது ஆடைகளை கொடுத்து அணிந்து கொள்ள சொன்ன அவர், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு கிடந்த உடைந்த வளையல்கள், மது பாட்டில்கள், சிந்திக் கிடந்த ரத்தக்கறைகளைக் சேகரித்து கொண்டார்கள்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #RAJASTHAN #RAPED