‘நாகினி டான்ஸ்’ ஆடும்போது திடீரென சுருண்டு விழுந்த நபர்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 16, 2019 08:53 AM

விநாயகர் சதுர்த்தி விழாவில் நாகினி நடனம் ஆடிய நபர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man dies after tumbling to floor at Ganesh immersion in MP

மத்தியப்பிரதேச மாநிலம் சீயோனி என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் முழுவதும் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழாவின் போது தாகூர் என்ற நபர் நாகினி நடனம் ஆடியுள்ளார்.

மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதில் தாகூர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகினி நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த நபரின் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Tags : #NAGINIDANCE #MADHYAPRADESH #GANESHIMMERSION #MAN #DIED