‘பராமரிப்பு பணி காரணமாக’.. ‘29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 27, 2019 12:56 PM

சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் யார்டில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு காரணமாக வரும் 29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

Chennai 44 Electric Trains cancelled on Sunday List Here

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வரும் 29ஆம் தேதி காலை 11.15 முதல் மாலை 3.15 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மற்றும் தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3, 3.10 மணி ஆகிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45, அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணி மின்சார ரயில்களும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50, திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணி என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பயணிகள் வசதிக்காக அந்த நாளில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1, 1.50 ஆகிய நேரங்களிலும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.15க்கும், திருமால்பூரில் இருந்து காலை 10.40க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ELECTRICTRAIN #TRAIN #CANCELLED #MAINTENANCE #WORK #LIST