16 காளைகளை... ஒட்டு மொத்தமாக அடக்கிய இளைஞர்... முதல் பரிசு என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்கையை ஒட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 676 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
விழாவின் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுயமார், மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஜிபி, எஸ்பி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் முதல் பரிசை சோழவந்தான் சட்டப் பேரவை தொகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர், களத்தில் 16 காளைகளைப் பிடித்து தட்டிச் சென்றார். அவருக்கு 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி சுசுகி இக்னிஸ் கார் பரிசாக அளிக்கப்பட்டது.
13 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசை ஐயப்பன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்ற வீரர் தட்டி சென்றார். இவருக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 10 காளைகளை அடக்கி கார்த்தி என்ற வீரர் மூன்றாவது பரிசை தட்டி சென்றார். வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் களத்தில் வீரர்களின் பிடியில் சிக்காமல் தண்ணி காட்டிய சிறந்த 3 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற காளையின் உரிமையாளர் செல்வத்துக்கு டிவிஎஸ் விக்டர் பைக் பரிசாக வழங்கப்பட்டது. பழங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவரின் காளைக்கு 3வது பரிசு வழங்கப்பபட்டது.