‘திடீரென இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்’.. விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 13, 2020 10:20 AM
மதுரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேந்தவர்கள் பிரேம்குமார்-தீபா தம்பதியினர். பிரேம்குமார் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். தீபா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களுக்கு மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2) என்ற குழந்தைகள் இருந்துள்ளனர். இரு குழந்தைகளும் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பின்பக்க மண்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய இரு குழந்தைகளும் மூச்சுத் திணறி உயிருக்கு போராடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாசியர் மற்றும் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
