கிணற்றுக்குள்ள வந்து பார்த்தபோது...’ காணவில்லை எனத் தேடிய சிறுமியின் நிலை... கலங்க வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கொளத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவருக்கு அபிநயா என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது மகள் இருந்தார். இவர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது தோழிகளுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அபிநயாவை காணவில்லை எனக்கூறி பெற்றோரும் உறவினரும் தேடிக்கொண்டிருந்தனர். சந்தேகத்தின்பேரில் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் பார்த்தபோது அபிநயா சடலமாக கிடந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : #WELL
