‘48 போட்டிகளிலேயே’... ‘தோனியின் சாதனையை தகர்த்து’... ‘கிங் விராட் கோலி முதலிடம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 03, 2019 11:13 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம், இந்திய கேப்டன் விராட் கோலி புது சரித்திரம் படைத்துள்ளார்.

கரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டி-20 மற்றும் ஒருநாள், போட்டிகளை முழுமையாக கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும், இந்திய அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை விராட் கோலி தகர்த்து முதலிடத்துக்கு முன்னேறினார்.
தோனி கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்கு 27 வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். இந்நிலையில் 48 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய விராட் கோலி, 28-வது வெற்றியை பெற்று தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 49 போட்டிகளில் விளையாடி, 21 வெற்றிகளுடன் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 3-ம் இடத்தில் உள்ளார். மேலும் அந்நிய மண்ணில் இரண்டாவது முறையாக தொடரின் எந்தப் போட்டியிலும், தோல்வியை சந்திக்காமல் அசத்தியது இந்திய அணி.
