'வண்டியவா சீஸ் பண்ற'... ‘காவல் நிலையத்திலேயே காவலர்களை’... ‘தாக்கிய அதிர்ச்சி வீடியோ’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 30, 2019 01:19 PM

விழுப்புரம் அருகே காவல் நிலையத்திலேயே, காவலர்களை, தந்தை - மகன்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sons and father arrested for attacking cops in police station

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். மேலும் அவர்களுடைய வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து வாகனத்துடன் இருவரையும், போலீசார் செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் நாகராஜ் மற்றும் ரமேஷின் தந்தையான அல்லிமுத்து, ஆர்.சி புத்தகத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்து மதுபோதையில் இருந்த நாகராஜ், ரமேஷ் மற்றும் அவரது தந்தை அல்லிமுத்து ஆகிய மூவரும் சேர்ந்து, எழுத்தர் விநாயக மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தாக்குதல் நடத்தினர். இதனை தடுக்க வந்த காவலர் ஜெயசங்கரையும் மூவரும் சரமாரியாக தாக்கினர்.

இதனை அடுத்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக தந்தை மற்றும் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் படுகாயமடைந்த காவலர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GINGEE #VILLUPURAM #POLICE #STATION