‘சென்னை ஸ்டார் ஹோட்டலில்’.. ‘தவறி விழுந்த நண்பரை’.. ‘காப்பாற்ற முயற்சித்தவருக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 30, 2019 03:36 PM

சென்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

74 YO man falls to death from escalator in Chennais star hotel

சென்னை எழும்பூர் பகுதியில் வசித்து வந்த ரமேஷ் ஜக்டியானி (74) என்பவர் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக கிண்டியிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளார். அங்கு அவர் எஸ்கலேட்டரில் ஏறும்போது உடன் இருந்த நண்பர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரைப் பிடிக்க முயற்சித்ததில் ரமேஷ் ஜக்டியானியும் தவறி விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் ஹோட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஜக்டியானி ஏற்கெனவே உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவருடைய நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #STARHOTEL #ESCALATOR #BUSINESSMAN