‘கையில் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Sep 02, 2019 01:01 PM
நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நபர் ஒருவர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்றாலும் உச்சக்கட்ட பாதுக்காப்பு பகுதியாகவே நாடாளுமன்ற வளாகம் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பைக்கில் வந்த நபர் ஒன்றாம் எண் கேட் வழியாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கத்தியுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அவர் நுழைய முயன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், டெல்லியில் உள்ள லக்ஷ்மி நகர் பகுதியை சேர்ந்த சாஜர் இன்ஸா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் டேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. குர்மீத் ராம் ரஹீம் தற்போது பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Delhi: A person has been detained while he was trying to enter the Parliament allegedly with a knife. He has been taken to Parliament police station. pic.twitter.com/rKforH5i5R
— ANI (@ANI) September 2, 2019