‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 30, 2019 10:53 AM
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சென்னையில் இருந்து சென்ற சார்மினார் விரைவு ரயில் ஹைதராபாத்தின் நம்பள்ளி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது, வெங்கடரெட்டி என்ற 45 வயது பயணி ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி விழுந்த அவர் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்ததும் அருகிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் விகுல் குமார் உடனடியாக விரைந்து செயல்பட்டு வெங்கட ரெட்டியை வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளார். இதில் அவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து நொடியில் செயல்பட்டு பயணியைக் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
#WATCH Hyderabad: Railway Protection Force (RPF) personnel saves a man from being pulled under a moving train at Nampally Railway Station. #Telangana (29.08.19) pic.twitter.com/IjHhFC0JAE
— ANI (@ANI) August 29, 2019