'மின்சார ரயில் சேவையில் மாற்றம்'... 'சென்னை பயணிகள் கவனத்திற்கு'...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 30, 2019 11:43 AM

சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

chennai electric train service changes due to maintenance

சென்னை எழும்பூர் முதல் கடற்கரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மின்சார ரயில் சேவைகளில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காலை 11.45 முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்கு கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையிலான 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை ஈடுகட்டும் வகையில் 14 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

Tags : #ELECTRICTRAIN #CHENNAI